Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யா மேடையில் ரஜினி, ஷங்கர் – ஜூலை 21-ல் பிரம்மாண்டமான விழா !

சூர்யா மேடையில் ரஜினி, ஷங்கர் – ஜூலை 21-ல் பிரம்மாண்டமான விழா !
, வியாழன், 18 ஜூலை 2019 (08:51 IST)
சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் ஆடியோ ரிலிஸ் விழாவில் ரஜினி மற்றும் ஷங்கர் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'காப்பான்'. அயன் மற்றும்  மாற்றான் படங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப்படம் சம்மந்தமாக வெளியான டீசர் மற்றும் சிறுக்கி பாடல் சமூக வலைதளங்களில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலிஸ் வரும் ஜூலை 21 ஆம் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது. இந்தப்படத்தை தயாரித்துள்ள லைகா புரொடக்‌ஷன்ஸ் இதைப் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளது. அதனால் இந்த விஷாவுக்கு ரஜினி மற்றும் ஷங்கரை அழைத்துள்ளது. அவர்களும் வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக புதியக் கல்விக்கொள்கை குறித்து பேசி நடிகர் சூர்யா தமிழகத்தில் விவாதங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'நேர் கொண்ட பார்வை' படத்தின் சென்சார் தகவல்