2023 - 24ஆம் ஆண்டுக்கான கரூர் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையை மேயர் கவிதா கணேசன் தாக்கல் செய்தார் - சுமார் 2 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்.
கரூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று காலை 10.00 மணிக்கும், அவசரக் கூட்டம் 10.30 மணிக்கும் நடைபெற்றது. முன்னதாக கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 2023 24 ஆம் ஆண்டுக்கான கரூர் மாநகராட்சி பட்ஜெட் நிதிநிலை அறிக்கையை மேயர் கவிதா கணேசன் எடுத்து வந்தார்.
2023 - 24 ஆம் ஆண்டுக்கான பொது நிதியாக 173.36 கோடியும், குடிநீர் வடிகால் நிதியாக 132.50 கோடியும், ஆரம்பக் கல்வி நிதியாக 7.12 கோடியும் செலவினங்களாக தாக்கல் செய்யப்பட்டது. மொத்த வரவு 311.46 கோடியும், மொத்த செலவினங்களாக 313.98 கோடி ரூபாயும் தாக்கல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் கரூர் மாநகராட்சியில் கூடுதலாக சுமார் 2 கோடி அளவில் பற்றாக்குறை பட்ஜெட்டை மேயர் கவிதா கணேசன் தாக்கல் செய்தார்.
மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.