Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊருக்குள் புகுந்த வெள்ளம் ; அதிரடி நடவடிக்கை எடுத்த கலெக்டர் (வீடியோ)

ஊருக்குள் புகுந்த வெள்ளம் ; அதிரடி நடவடிக்கை எடுத்த கலெக்டர் (வீடியோ)
, திங்கள், 11 செப்டம்பர் 2017 (15:02 IST)
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம்,  காமாட்சிபுரம்  காலனி .,  தெற்குபட்டி கிராமம், கஞ்சமாறன் பட்டி  பகுதியில்  தொடர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் நேரில் பார்வையிட்டதோடு, அப்பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களையும் வழங்கினார்.


 

 
இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் பெய்து வரும் மழையினால் மானாவாரி பகுதிகளில் மழைநீர் வழிந்தோடியதோடு, மழை நீர் ஆங்காங்கே தேங்கி ஒட்டு மொத்தமாக கஞ்சமாறன் பட்டி பகுதியில் புகுந்தது. இந்நிலையில் அப்பகுதி மக்களின் தகவலையடுத்து உடனே அப்பகுதி மக்களை ஊரில் உள்ள அரசு பள்ளியில் தங்கவைக்கப்பட்டதோடு., அங்கே தொற்று நோய்கள் மற்றும் மழைக்கால நோய்கள் வராமல் இருக்க, சுகாதாரத்துறையின் மூலம் சிறப்பு மருத்துவமுகாம், மற்றும் அப்பகுதி மக்களுக்கு இரவு, காலை, மதியம், மாலை உணவுகள் வழங்கப்பட்டது.
 
இதையொட்டி நேரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், காமாட்சிபுரம் காலனியில் வசிக்கும் 23  குடும்பங்களுக்கும். கஞ்சமாறன்பட்டியில் வசிக்கும் 22 குடும்பங்களைச்  சார்ந்தவர்களுக்கும்  அவர்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக வேஷ்டி, சேலை, போர்வை, தலா 10 கிலோ அரிசி  தலா ரூ.1000/- ம்  பணமும் வழங்கினார். அதோடு, பிஸ்கட், ரொட்டிகளும் வழங்கப்பட்டது.
 
மேலும்  மழைநீர்  வடிவதற்காக  வருவாய்த் துறை  மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது நிலமை சீராக உள்ளதாக கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்    கோவிந்தராஜ் தெரிவித்தார்.
 
இந்நிகழ்ச்சியின்  போது  வருவாய்  கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் மருத்துவர்  நளினி  உள்ளிட்ட ஏராளமான அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
மேலும் ஊர் பொதுமக்கள் மழையினால் சிரமப்படுவதையடுத்து உடனே நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் அவர்களுக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது.
 
பேட்டி : கேசவன் – கஞ்சமாறன் பட்டி – அரவக்குறிச்சி – கரூர் மாவட்டம்

சி. ஆனந்தகுமார்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.2500 விலையில் 4G ஸ்மார்ட்போன்: ஜியோவை அடக்க ஏர்டெல் மாஸ்டர் ப்ளான்!!