தொலைத்தொடர்பு துறையில் பல நிறுவனங்கள் இருந்தாலும் ஏர்டெல் மற்றும் ஜியோவின் போட்டி சற்று கடுமையாகவே உள்ளது.
தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிரடியாக அறிவித்த இலவச ஜியோ போனுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் மொபைல் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோ நிறுவனம் இலவச டேட்டா மூலம் பல வாடிக்கையாளர்களை கையில் அடக்கியது. இதனால் ஏர்டெல் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தது.
இந்நிலையில், ஜியோவை அடக்க ஏர்டெல் 4G ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது.
ரூ.2500 முதல் ரூ.2700 வரை இதன் விலை நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது. 4 இன்ச் டச் ஸ்கிரீன், டூயல் கேமரா, 1GB RAM, 4G VoLTE வசதி, நீடித்து நிற்கும் பேட்டரி போன்ற முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெரும்.
தீபாவளியை ஒட்டி ஏர்டெல் தனது மொபைல் அறிவிப்பை வெளியிடும் என்றும் தெரிகிறது.