Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்தான் ஜனாதிபதியையே தேர்வு செய்தேன்: ஒரே போடாய் போட்ட கருணாஸ்

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2018 (18:13 IST)
நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் சமீபத்தில் ஜாதியை முன்நிறுத்தி பேசியது, போலீஸாரை அவதூறாக பேசியது என பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். 

 
இது குறித்து நிருபர்கள் அவரிடம் கேட்டபோது அவர் கூறிய பதைல் பின்வருமாறு, நான் 2009 ஆம் ஆண்டு முதல் அமைப்பு நடத்தி வருகிறேன். இதுவரை என் மீதும், என் தொண்டர்கள் மீதும் எந்த ஒரு வழக்கும் இல்லை.
 
வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் முழு வீடியோவை பாருங்கள். 47 நிமிடங்கள் நான் பேசியுள்ளேன். இத்தனை வருடங்களாக பொதுக் கூட்டங்களை பேசி வருகிறேன். என்றைக்கும் ஒரு ஜாதிக்கு எதிராக கருத்து சொன்னது கிடையாது. 
 
இதுவரை எந்த கூட்டத்திலும் நான் ஒருமையிலும் பேசியது இல்லை. என்னமோ என்னை அறியாமல் நான் ஒருமையில் பேசிவிட்டேன். நானாகவே தவறை உணர்ந்துதான் மன்னிப்பு கேட்டேன். 
 
சாதாரண தலைவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட எனக்கு வழங்கவில்லை. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை நான்தான் தேர்ந்தெடுத்தேன் என்று சொல்றேன். அதில் ஏதாவது தப்பு இருக்கா? நானும்தான் ஓட்டு போட்டேன்ல்ல என்று கருணாஸ் எதிர் கேள்வி கேட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments