காமெடி நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கடந்த சில தினங்களுக்கு முன் ஜாதி மோதலை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், காவல்துறை உயரதிகாரி ஒருவர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்/
இந்த நிலையில் கருணாஸ் பேச்சுக்கு கிட்டத்தட்ட அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவிட்ட நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் இன்னும் மெளனம் சாதித்து வருகிறார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், 'லொடுக்கு பாண்டி கருணாஸ் சாதி குறித்து பேசியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். மேலும் தன்னை அரிச்சந்திரன் என்று கருணாஸ் கூறியதற்கு நன்றி - என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.