Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணாநிதியின் முதலாமாண்டு நினைவுதினம்: அண்ணா சாலையில் அமைதி பேரணி

கருணாநிதியின் முதலாமாண்டு நினைவுதினம்: அண்ணா சாலையில் அமைதி பேரணி
, புதன், 7 ஆகஸ்ட் 2019 (08:56 IST)
முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் முதலாமாண்டு நினைவுதின இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு தினத்தையொட்டி முத்தமிழறிஞர் அவரது நினைவுகளைச் சுமந்து அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே தொடங்கி கருணாநிதியின் நினைவகம் வரை அமைதி பேரணி தற்போது நடைபெற்று வருகிறது
 
இந்த அமைதிப்பேரணியில் திமுக பொருளாளர் துரைமுருகன் , தூத்துகுடி எம்பிகனிமொழி, ஆ.ராசா ,ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் மெரினாவில் உள்ள நினைவிடம் நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த அமைதி பேரணியில் ஆங்காங்கே திமுக தொண்டர்கள் பங்கேற்று வருவதாக் இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று உள்ளனர்.
 
மேலும் இன்று கருணாநிதியின் முதலாவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அதிகாலை முதலே கருணாநிதியின் நினைவகத்தில் திமுக தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருவதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல்துறையினர் செய்துள்ளனர்.
 
webdunia
கருணாநிதியின் நினைவகத்தில் அஞ்சலி செலுத்திய திமுக தொண்டர்கள் இந்த நாளை நினைவு கூறும்போது, 'எங்கள் தலைவர் எங்கே மறைந்துவிட்டார். அவர் எங்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சூரியன் ஏதுங்க மறைவு. அவர் உடல்தான் சற்று ஓய்வு எடுத்து கொண்டிருக்கிறது. ஆனால் அவரது உள்ளம் தமிழக மக்களின் நலன்கள் குறித்த நினைவுகளில் உள்ளது என்று கூறினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் மறைந்த இரண்டு பெண் பிரபலங்கள்: பெண் இனத்திற்கே பேரிழப்பு!