பெரியாரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பேரறிஞர் அண்ண திமுக கட்சியைத் தொடங்கினார். அவரது தம்பிகளும் அக்கட்சிக்கு பலத்த ஆதரவு தந்து கட்சியை வளர்த்தனர். அக்கட்சியின் முக்கிய அம்சமாக பெரியார் போற்றிபேசி வந்த பகுத்தறிவு தலையாயதாகக் கருதப்பட்டது. ஆனால் அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்களின் குடும்பத்தினர் சிலர் ஆத்திகர்களாகவே இருந்து வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தீவிர பகுத்தறிவாளர். அவரது மகனும் திமுக தலைவருமான ஸ்டாலினும் அதே பகுத்தறிவாளர்தான். ஆனால் அவரது குடும்பத்தினர் கோவிலுக்குச் செல்வதையோ, வழிபடுவதையோ அவர் தடுத்ததில்லை.
இந்நிலையில் சமீபத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மனை திருமதி துர்கா ஸ்டாலின் ஒரு கோவிலில் உள்ள சூலத்தில் எலுமிச்சை பழத்தை குத்திவழிபாடு செய்தார். இதை அங்குள்ள ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகிவருகிறது.
மேலும் இதை விமர்சித்தும் சிலர் கருத்துக் கூறி வருகிறார்கள். ஸ்டாலின் மேடையில் இந்துக்களை குறித்து விமர்சிக்கிறார். ஆனால் அவரது குடும்பத்தினர் கோவில்களுக்கு சென்று வழிபடுகின்றனர்.அதனால் ஸ்டாலின் இரட்டை மனப்போக்குடன் செயல்படுகிறார் என்று தெரிவித்து வருகின்றனர்.