Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகாபாரத கண்ணனைவிட கருணாநிதி ஆளுமை மிக்கவர்: ஆ.ராசா

Advertiesment
மகாபாரத கண்ணனைவிட கருணாநிதி ஆளுமை மிக்கவர்: ஆ.ராசா
, சனி, 14 ஜூலை 2018 (11:43 IST)
மகாபாரதத்தில் தோன்றும் கண்ணனைவிட கருணாநிதி ஆளுமை மிக்கவர் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார். திமுக தலைவர்  கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம்,  சென்னை அடையாரில் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா,  மகாபாரதத்தில் தோன்றும் கண்ணன் ஒருசமயம் பத்தாயிரம் பிம்பங்களாக காட்சியளித்தார். அப்போது பாண்டவர்களை பார்த்து, உங்களில் யார் சரியான பிம்பத்தை தேர்வு செய்கிறார்களோ அவர்களே என் மீது அதிக பக்தி வைத்துள்ளவர் என்று கூறினார். இதில் சகாதேவன் மட்டுமே வெற்றி அடைந்தார்
 
அதேபோல் கருணாநிதியும் கண்ணனைவிட அதிக பிம்பங்கள் கொண்டவராக உள்ளார். அவருடைய பிம்பத்தை பலர் பிடித்து வருகின்றனர். யார் உண்மையான பிம்பத்தை பிடித்துள்ளார் என்பதை எங்களாலே கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில் கண்ணனை விட கருணாநிதி ஆளுமை மிக்க தலைவராக விளங்குகிறார்.
 
webdunia
மொழியை முன்னிறுத்தி இனத்தை மீட்பது, இனத்தை முன்னிறுத்தி மொழியை காப்பது என்பதே கருணாநிதியின் கொள்கையாக இருந்தது. அதனாலேயே அவர் தனிப்பெரும் தலைவராக இருந்து வருகிறார் என முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடத்தையில் சந்தேகபட்ட கணவன் - குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை