Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிரூபித்தால் நாளைக்கே ஆட்சியை கலைப்பேன் - ஸ்டாலின் சவால் (வீடியோ)

நிரூபித்தால் நாளைக்கே ஆட்சியை கலைப்பேன் - ஸ்டாலின் சவால் (வீடியோ)
, திங்கள், 2 ஜூலை 2018 (11:36 IST)
திமுகதான் பல முறை ஆட்சியை இழந்துள்ளது.  கருணாநிதி யார் ஆட்சியையும் கலைக்கவில்லை.  அப்படி அவர் கலைத்ததாக நிரூபித்தால்,  நாளைக்கே இந்த ஆட்சியை கலைக்கிறேன் என கரூரில் நடைபெற்ற திமுக மாணவரணி ஆலோசனைக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் அதிரடியாக பேசினார்.
 
கரூரில் கடந்த சனிக்கிழமை (30-07-18) மாலை., மாணவரணி,  மாநில, மாவட்ட, மாநகர ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க வின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு அங்கு பேசியதாவது:
 
கொங்கு மண்டலம் திமுக வலுவில்லாத மண்டலம். இன்னும், 15 இடங்கள் பெற்றிருந்தால் நாம் ஆட்சி அமைத்து இருப்போம். எனவே தான் முதலில் கொங்கு மண்டலத்தில் களையெடுப்பு நடந்து முடிந்திருக்கிறது. நாளை அல்லது நாளை மறுநாள் தென் மண்டல களையெடுப்பு நடக்கவிருக்கிறது.  ஆகவே, கட்சிக்கு வரலாம், எம்.பி, எம்.எல்.ஏ க்கள், மந்திரிகளாக, ஏன், ஒ.பி.எஸ்., இ.பி.எஸ் எல்லாம் முதல்வர் ஆகும் போதெல்லாம் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். ஆனால் இயக்கத்தை வலுப்படுத்த முடியாது.
 
அப்படிபட்ட ஒரு நல்ல இயக்கம் தான் தி.மு.க தான் என்றதோடு., கட்சிகள் ஏராளமானவைகள் இருக்கலாம், இல்லை கட்சிகள் கூட இல்லாமல், நான் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று கனவுடன் தமிழகத்தில் சுற்றலாம், ஆகவே, நான் அவர்களை பற்றி பேச விரும்ப வில்லை ஏன், என்றால் நான் கலைஞரின் மகன் என்றதோடு., உலகத்திலேயே திமுக மட்டுமே கட்டுப்பாடுடன் இருக்கிறது. கட்சிக்குள் அதிகம் ஜனநாயகம் உள்ளது” என அவர் பேசினார்.
 


 
-சி. ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொர்க்கத்திற்கு செல்ல கூட்டாக தற்கொலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர்