முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒரு ஆண்டு முழுவதும் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை மக்கள் விழாவாக நாடே திரும்பி பார்க்கும் வகையில் கொண்டாட வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 3 முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரை ஒரு ஆண்டு இந்த விழாவை கொண்டாட தீர்மானம் ஏற்றப்பட்டுள்ளது. திமுகவை மேலும் வலுப்படுத்த புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க மாபெரும் முன்னேடுப்பு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.