ப.சிதம்பரம் கைது குறித்து தமிழிசை பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார் கார்த்திக் சிதம்பரம்.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதைதொடர்ந்து ப.சிதம்பரம் கைது நாடெங்கும் கவனத்தை பெற்றுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ப.சிதம்பரம் பக்கம் தவறு இருந்ததால்தான் அவர் தலைமறைவாகினார் என தெரிவித்தார். தமிழிசையின் இந்த கருத்து குறித்து ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்திடம் கேட்கப்பட்டது.
கார்த்திக் சிதம்பரம் கூறியது பின்வருமாறு, பணமதிப்பிழப்பு தொடங்கி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து வரை எனது தந்தை அனைத்தையும் விமர்சித்து வந்தார், அவரை அடக்கி ஒடுக்கவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது ஒரு கீழ் தரமான செயல், அரசியல் பழிவாங்கலுக்காகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட வழக்கு. இதை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்.
அதேபோல் திருமதி தமிழிசை சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. அவருக்கு சட்டமும் தெரியாது, அரசியலும் தெரியாது என்றுதான் நான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.