Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிதம்பரம் கைது… திமுகவுக்கு மகிழ்ச்சியா ? – 2ஜி பிளாஷ்பேக் சொல்லும் உடன்பிறப்புகள் !

சிதம்பரம் கைது… திமுகவுக்கு மகிழ்ச்சியா ? – 2ஜி பிளாஷ்பேக் சொல்லும் உடன்பிறப்புகள் !
, வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (09:34 IST)
ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு வெளிப்படையாக திமுக கண்டனம் தெரிவித்தாலும் திமுகவினர் மத்தியில் இது மகிழ்ச்சியையே ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டர். 9 முறை இந்தியாவின் பட்ஜெட் தாக்கல் செய்தவரும், உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகியப் பதவிகளை வகித்தவருமான சிதம்பரம் கைது இந்திய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.

இந்நிலையில் இந்த கைதால் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக அதிர்ச்சிக்குப் பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவே தெரிகிறது. அதற்குக் காரணம் கடந்த 2009- 2014 கூட்டணியின் போது திமுகவின் பேரில் பாராமுகமாக நடந்துகொண்ட சிதம்பரத்தின் நடவடிக்கைகள்தான் காரணம் என தெரிகிறது. 2 ஜி வழக்கில் ராஜாவை ராஜினாமா செய்ய சொல்லி வற்புறுத்தியது, அதே வழக்கில் கனிமொழியின் பேரையும் இணைத்தது, கலைஞர் டிவி அலுவலகத்தில் ரெய்டு நடத்தி திமுக தலைவர் கருணாநிதியின் மனைவியை விசாரித்தது என அனைத்தும் சிபிஐ மூலம் ப சிதம்பரம் நடத்தியதுதான் என்கின்றனர் உடன்பிறப்புகள். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப சிதம்பரம் சிபிஐ-யை தன் கைப்பாவையாக ஆட்டிப்படைத்தார். இப்போது அதே சிபிஐ-யே அவரைக் கைது செய்துள்ளது.’ என சமூகவலைதளங்களில் கொந்தளிக்கின்றனர்.

இதனாலேயே திமுக தலைவர் ஸ்டாலினும் பட்டும் படாமல் ‘ சிதம்பரம் சட்ட வல்லுனர். அவர் சட்ட ரீதியாக இதை எதிர்கொள்வார்’ எனக் கருத்து தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ப சிதம்பரத்தை முதல்முறையாகக் கைது செய்ய திமுக ! – ஒரு சின்ன பிளாஷ்பேக்