திருச்சி போன்ற சிறிய நகரத்திற்கு மெட்ரோ தேவையில்லை என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறிய நிலையில் அவருக்கு திமுக எம்பி அருண் பதிலடி கொடுத்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் திருச்சி போன்ற சிறிய நகரங்களுக்கு மெட்ரோ தேவையில்லை, சிந்திக்க படாத இந்த மாதிரியான திட்டமிட்டுங்களுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அதற்கு பதிலாக அடிப்படை தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று பதிவு செய்திருந்தார்.
அதற்கு பதிலடி கொடுத்த திமுக எம்பி அருண் கிராமங்களை திருச்சி நகரத்துடன் இணைப்பது மெட்ரோ தான் என்றும் இதை மக்கள் விரும்புகின்றனர் என்றும் நகரத்தில் தான் கல்லூரிகள் மருத்துவமனைகள் அரசு அலுவலகங்கள் உள்ளதால் வேகமாக வளர்ந்து வரும் திருச்சிக்கு சாலைகள் கையாள முடியாததால் மெட்ரோ அவசியம் என்றும் தெரிவித்தார்.
அதற்கு கார்த்தி சிதம்பரம் 27 லட்சம் மக்கள் தொகை கொண்ட திருச்சிக்கு மெட்ரோ தேவையில்லை என்றும் ஏற்கனவே சென்னை மும்பை டெல்லி நகரங்களில் மெட்ரோ நஷ்டத்தில் இயங்குகிறது என்றும் திருச்சிக்கு மெட்ரோவை தவிர மற்ற அவசர தேவைகள் உள்ளன, அவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
எக்ஸ் பக்கத்தில் இருவரும் மாறி மாறி வாக்குவாதம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.