Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓடும் ரயிலில் சாப்ட்வேர் எஞ்சினியர் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. திருச்சி - சென்னை ரயிலில் அதிர்ச்சி சம்பவம்..

ஓடும் ரயிலில் சாப்ட்வேர் எஞ்சினியர் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. திருச்சி - சென்னை ரயிலில் அதிர்ச்சி சம்பவம்..

Siva

, வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (09:33 IST)
திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த நிலையில் குற்றவாளியின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டு அவரை கண்டுபிடிக்க உதவி செய்யுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கடந்த 25 ஆம் தேதி திருச்சியில் இருந்து சென்னை வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் இளம்பெண் ஒருவரை காட்பாடி அருகே ரயிலில் சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஓடும் ரயிலில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை ரயில்வே காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் உள்ள நபர் குறித்து தகவல் தந்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் ரயில்வே காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும் இந்த நபரை யாராவது பார்த்தால் உடனடியாக தகவல் சொல்வதற்காக செல்போன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

9962500500, 9498136719, 9498101950, 9444115461, 9443007015

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பராமரிப்பு பணிகள்: சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!