காஞ்சி வரதராஜர் கோவிலில் அத்திவரதர் பைபவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 5 ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஆததால் 92 ஆயிரம் பேர் சாமியை தரிசனம் செய்ய வந்தனர். இதனால் கோலிலில் காலை 5 மணி முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர்.
இந்நிலையில் இந்த ஐந்து நாட்களில் மட்டும் காஞ்சி அத்திவரதரை தரிசிக்க 4 லட்சத்து 35 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
இதில், சிறப்பு தரிசன டிக்கெட் (500) காலையில் 250 பேருக்கும், மாலையில் 250 பேருக்கும் மட்டுமே இணையதளம் மூலம் வழங்கப்படுமென்று தெரிவிக்கபட்டது,மேலும் சனிக்கிழமையான நாளை, அதிகாலை முதல் காஞ்சிபுரத்துக்கு மின்சார ரயில்கள் இயக்கவும், கோவில் அருகே மினிப்பேருந்துகள் வருவதற்கும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.