Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று முதல் ஐபிஎல் காய்ச்சல் –ஹைவோல்டேஜ் முதல் போட்டி !

Advertiesment
ஐபிஎல் 2019
, சனி, 23 மார்ச் 2019 (11:08 IST)
12 ஆவது ஐபிஎல் போட்டிகள் இன்று தொடங்க இருக்கின்றன. முதல் மேட்சில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதிக்கொள்கின்றன.

இந்தியாவில் நடைபெற இருக்கும் தேர்தலால் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடக்காது என எதிர்பார்க்கப்பட்டது. அதனால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தென் ஆப்பிரிக்கா அல்லது துபாயில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே இதுபோல 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகள் பாராளுமன்றத் தேர்தலின் போது வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன.ஆனால் பிசிசிஐ இந்தியாவிலேயே ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என அறிவித்து இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஐபிஎல் போட்டிகளின் அசுர வளர்ச்சி கிரிக்கெட் ரசிகர்களை வாய்பிளக்க வைக்கும் அளவுக்கு உள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்காக அந்தந்த நாட்டிக் கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் அட்டவணைகள மாற்றியமைத்துக்கொள்ளும் சூழ்நிலைட் உருவாகியுள்ளது. ஐபிஎல் நேரங்களில் பெரும்பாலான கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் அணிக்கு சர்வதேசப் போட்டிகள் இல்லாதவாறுப் பார்த்துக்கொள்கின்றனர். இவ்வளவு ஏன் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பைப் போட்டிக் கூட மே இறுதிக்குப் போனதுக்கு ஐபிஎல் போட்டிகளும் முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

அதையடுத்து முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 7 மணிக்கு தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சேம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வலுவான பெங்களூர் அணியும் மோதுகின்றன. இதனால் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
webdunia

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :-
சூதாட்டப்புகாரில் சிக்கி இரண்டு ஆண்டுகள் தடை பெற்றது, மூன்று முறை சாம்பியன் பெற்றது என தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ஐபிஎல் போட்டித் தொடரில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. சென்னை அணி ஒருமுறைக் கூட அரையிறுதி சுற்றுக்கு செல்லாமல் ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறியது இல்லை எனும் பெருமைக்குரிய அணி. தோனி, ரெய்னா, பிரவோ, ஜடேஜா என தமிழக மக்களுக்கு மிகவும் பிடித்தமான வீரர்களைக் கொண்ட தோனி தலைமையிலான சென்னை அணிக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சமபலம் பொறுந்திய அணியாக வலம் வந்துகொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு சென்னையில் போட்டிகள் நடக்காததால் இம்முறை சென்னை ரசிகர்கள் தோனி படையில் கர்ஜனையைக் காண ஆவலாக உள்ளனர்.

webdunia

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் :-
கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியிடம் சிறப்பான பேட்டிங் ஆர்டர் இருந்தாலும் மிகப்பெரிய இமாலய இலக்குகளை நிர்ணயித்தாலும் பவுலிங் சொதப்பலால் பல போட்டிகளைத் தோற்றுள்ளது. இதுவரை ஒருமுறைக் கூட கோப்பையை வென்றதில்லை என்றாலும் ஐபிஎல் –ன் எண்டர்டெயினர் அணியாக ஆர்சிபி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் அந்த அணியின் பேட்ஸ்மேன்களான கோஹ்லி, டிவில்லியர்ஸ் மற்றும் முன்னாள்  வீரர் கெயில் ஆகியோர்தான். அதனால் இந்தமுறைக் கோப்பையை வெல்லும் கனவோடு களமிறங்குகிறது கோஹ்லி அணி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சேப்பாக்கத்துக்கு கூடுதல் ரயில்கள் – தோனியா ? கோஹ்லியா ?