Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கனிமொழி பேரணியில் காற்றில் பறக்கவிட்ட தனிமனித இடைவெளி: அதிர்ச்சி தகவல்

Advertiesment
கனிமொழி பேரணியில் காற்றில் பறக்கவிட்ட தனிமனித இடைவெளி: அதிர்ச்சி தகவல்
, திங்கள், 5 அக்டோபர் 2020 (17:39 IST)
கனிமொழி பேரணியில் காற்றில் பறக்கவிட்ட தனிமனித இடைவெளி
ஹாத்ராஸ் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கனிமொழியின் நடத்திய பேரணியில் தனிமனித இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹாத்ராஸ் என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அரசியல் ஆக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது குறிப்பாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து அறிக்கைகள் பேட்டிகள் கொடுத்து வருவதோடு போராட்டங்களும் பேரணிகளையும் நடத்தி வருகின்றன 
 
அந்த வகையில் இன்று சென்னையில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி ஹாத்ராஸ் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பேரணி நடத்தி வருகிறது. இந்த பேரணியில் கலந்து கொண்ட மகளிர் அணியினர் தனிமனித இடைவெளியின்றி நெருக்கமாக சென்று கொண்டிருப்பதும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் உச்சத்தில் இருக்கும் நிலையில் இவ்வாறு கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் கனிமொழி எம்பி அவர்கள் பேரணி நடத்தி வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாதி மறுப்பு திருமணம் செய்த எம்.எல்.ஏ...பெண்ணின் தந்தை தீக்குளிக்க முயற்சி!