Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாதி மறுப்பு திருமணம் செய்த எம்.எல்.ஏ...பெண்ணின் தந்தை தீக்குளிக்க முயற்சி!

Advertiesment
சாதி மறுப்பு திருமணம் செய்த எம்.எல்.ஏ...பெண்ணின் தந்தை தீக்குளிக்க முயற்சி!
, திங்கள், 5 அக்டோபர் 2020 (17:38 IST)
தமிழகத்தில் இன்னும் சாதி மறுப்புக்கு எதிர்ப்புகள் இருந்தாலும்,  சாதி மறுப்புத் திருமணங்கள் நடந்து கொண்டுதானுள்ளது.

இன்றைய இளைஞர்கள், மாணவிகள் எனப் பலரும் இதற்கு ஆதரவு தருவதும் ஒரு காரணம்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ  பிரபு, கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார்.

இந்தத் திருமணத்தில் அவர்களது உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அரசியல் தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் எம்.எல்.பிரபு தனது பெண்ணைக் கடத்திச் சென்று கல்யாணம் செய்து கொண்டதாக சௌந்தர்யாவின் தந்தை காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

பின்னர் எம்.எல்.ஏ பிரவு வீட்டின்முன்   வந்த சௌந்தர்யாவின் தந்தை தீக்குளிக்க முயன்றார்.பின்னர் போலீஸார் அவரை மீட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.;
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடியை ஓவர் டேக் செய்த ராகுல்காந்தி...ஃபேஸ்புக்கில் அதிகப் பார்வையாளர்கள் !