Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனை அடுத்து பிரதமர் மோடியை சந்தித்த கனிமொழி.. தமிழக அரசியலில் பரபரப்பு..!

Mahendran
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2025 (17:15 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கீழடி விவகாரம் குறித்து கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது திமுக எம்.பி. கனிமொழி பிரதமரை சந்தித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த சந்திப்பு குறித்துக் கனிமொழி தனது 'எக்ஸ்' பக்கத்தில், "பிரதமர் மோடியை சந்தித்து எனது தூத்துக்குடி தொகுதியில் உள்ள பிரச்சனைகள் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் நிலவி வரும் பிரச்சினைகளை விவரித்தேன்.
 
தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையம் அமைப்பதற்கு உறுதுணையாக இருந்ததற்கு நன்றி தெரிவித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம், 452 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய விமான நிலைய முனையம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
கமல்ஹாசன் மற்றும் கனிமொழி என திமுக எம்.பி.க்கள் அடுத்தடுத்து பிரதமரை சந்திப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரும்ப பெறப்படும் புதிய வருமானவரி மசோதா! மீண்டும் புதிய மசோதா! - மத்திய அரசு அதிர்ச்சி முடிவு!

10 சதுர அடி வீட்டில் 80 வாக்காளர்கள்.. ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு..!

கூட்டணி கட்சிகளுக்கு பணம் கொடுத்து திமுக அடிமையாக வைத்துள்ளது: எடப்பாடி பழனிசாமி

மாநிலக் கல்வி கொள்கை என்ற பெயரில் இன்று ஒரு நாடகம் அரங்கேற்றம்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments