Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாதஸ் திருந்திட்டானா? - பெரியார் போட்டோவுடன் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து!

Advertiesment
நாதஸ் திருந்திட்டானா? - பெரியார் போட்டோவுடன் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து!
, செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (11:41 IST)
இன்று கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் காஞ்சிபுரம் திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள வாழ்த்து போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொதுவாக இந்து பண்டிகைகளுக்கு திமுகவினர் வாழ்த்து சொல்வது கிடையாது, ஆனால் இப்தார் நோன்பில் கலந்து கொள்வது, இஸ்லாமிய பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது போன்றவற்றை திமுக செய்கிறது என ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் கந்த சஷ்டி கவச விவகாரத்தில் தங்களது நிலைபாடு குறித்து விளக்கமளித்த திமுக ”தாங்கள் இந்துக்களுக்கு விரோதி இல்லை” என்று கூறியிருந்தனர். இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. “கடவுள் இல்லை” என தொடர்ந்து கடவுள் மறுப்பு பேசி வந்த பெரியார், திமுக ஸ்தாபகர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி என திமுக பிரபலங்கள் பலரின் புகைப்படங்களுடன் குழந்தை கிருஷ்ணர் போட்டோவையும் இணைத்து கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் சொல்லி ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டர் பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவிலிருந்து திடீரென ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ள நிலையில் பலர் “நாதஸ் திருந்திட்டானா?” என்ற திரைப்பட காமெடி வசனத்தை இதனுடன் தொடர்புப்படுத்தி பதிவிட்டுள்ளனர். சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்துக்கள் இடையே நன்மதிப்பை பெற திமுக இந்து நிகழ்ச்சிகளுக்கும் வாழ்த்து சொல்ல தொடங்கி விட்டார்களா அல்லது தலைமைக்கு தெரியாமல் மாவட்ட நிர்வாகிகள் இப்படியான போஸ்டர்களை ஒட்டியுள்ளார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாய் பேசாத, காது கேளாத சிறுமி கூட்டு பலாத்காரம்: 3 நாட்களுக்கு பிறகே தெரிந்த சோகம்