திமுகவில் உள்ள சீனியர்கள் தற்போது உதயநிதி ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கைகளால் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.
திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு கடந்த ஆண்டி திடீரென இளைஞர் அணி செயளாலர் பதவி வழங்கப்பட்டது. அப்போது அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும், அவை அனைத்தையும் முறியடித்து கட்சி தேவையானதை செம்மையாக செய்து வருகிறார்.
கொரோனா காலத்தில் பட ஷூட்டிங்கும் இல்லததால் உதயநிதியின் ஃபோகஸ் மொத்தமும் திமுக மீதே உள்ளது. அதுவும் இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் வரவுள்ளதால் இப்போதே முக்கிய முடிவுகளை எடுக்க துவங்கிவிட்டார் உதயநிதி. ஆம், சமீப காலமாக திமுகவில் முக்கிய முடிவுகளில் உதயநிதியிடமும் கலந்து ஆலோசிப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
சில சமயங்களில் உதயநிதி தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகளையும் ஸ்டாலின் ஆதரப்பதாகவே தெரிகிறது. இதனால் கட்சியில் உள்ள சீனியர்களின் கை கட்டிப்போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இளைஞர்களை அதிகம் ஊக்கப்படுத்தும் உதயநிதி அட்வைஸுக்கு மட்டும் சீனியர்களை வைத்துள்ளாரே தவிர களவேலைகளுக்கு இல்லை என கூறப்படுகிறது.
இதை பயன்படுத்திய உதயநிதிக்கு நெருக்கமாக உள்ள சிலர் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவதாகவும் கூறப்படுகிறது. உதயநிதிக்கு பதவி கொடுக்கலாம் என பேசிய சீனியர்களின் கதை தற்போது சும்மா போனா ஓணானை வேட்டியில் எடுத்துவிட்டுக்கொண்ட கதையாக நெளிந்து வருகிறார்களாம்.
ஆனால், இது போன்ற உத்வேகம் திமுகவிற்கு நிச்சயம் தேவை எனவும் சிலர் நினைக்கின்றனர். எத்தனை பேர் விமர்சித்தாலும் நக்கலாய் டிவிட் போட்டு பதிலடி கொடுப்பது, கட்சிக்காவும், பொதுமக்களுக்காகவும் முன்வந்து உதவுவது என உதயநிதி தன்னை சிறப்பாகவே பிரதிபலித்துக்கொள்கிறார்.