தமிழகத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 க்கு எதிப்புகள் வலுத்து வரும் நிலையில் மீண்டும் கோலம் மூலம் எதிர்ப்பு ட்ரெண்டாகியுள்ளது.
மத்திய அரசு அமல்படுத்தவுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 ஐ எதிர்த்து தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள் சில குரல் கொடுத்து வருகின்றன. இந்த வரைவு அமலுக்கு வந்தால் இந்தியாவின் இயற்கை வளங்கள் அழியும் என்றும், இது மக்கள் குரல்களை ஒடுக்கும் முயற்சி எனவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு மற்றும் கடலோர ஒழுங்கு முறை ஆணைய விதி ஆகியவற்றை திரும்ப பெற கோரி சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் மீனவர்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வாசகங்களை எழுதி கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக இந்திய குடியுரிமை கணக்கெடுப்பு உள்ளிட்டவற்றிற்கு மேற்படி கோலம் மூலமாக எதிர்ப்பு தெரிவிப்பது ட்ரெண்டான நிலையில் இ.ஐ.ஏவிற்கு எதிராகவும் கோலம் போடுவது தற்போது ட்ரெண்டாகியுள்ளது.