காமராஜர் சாகும்போது கருணாநிதியின் கையை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என கெஞ்சினார்" என்று தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பெரம்பூரில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா, காமராஜர் பிறந்தநாள் என்பதால் அது தொடர்பாகவும் பேசினார். அப்போது, "கருணாநிதி சில சமயம் என்னிடம் தன்னுடைய பழைய நிகழ்வுகளை சொல்வார். அவ்வாறு சொன்னது ஒன்றை நான் உங்களுக்கு சொல்கிறேன்.
தமிழகம் முழுவதும் காமராஜர் கண்டன கூட்டம் போடும்போது அவருக்கு ஏசி இல்லை என்றால் உடம்பு ஒத்துக் கொள்ளாது என்று கருதி, கருணாநிதி அவர் தங்கும் விடுதியில் ஏசி அமைக்க உத்தரவிட்டார். தன்னை எதிர்த்துப் பேசினாலும் அவரது உடல்நிலை கருதி நான் உத்தரவிட்டேன்" என்று கூறினார். "
காமராஜர் தன்னுடைய உயிர் பிரியும்போது கருணாநிதியின் கையைப் பிடித்து கொண்டு நாட்டை காப்பாற்றுங்கள் என்று கூறினார்" என்ற தகவலையும் திருச்சி சிவா கூறினார். இதுதான் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
காமராஜரும், கருணாநிதியும் தற்போது உயிரோடு இல்லை என்ற நிலையில், இப்படி ஒரு கருத்தை இதுவரை யாருமே கூறியதில்லை. ஆனால், இவ்வளவு ஆண்டுகள் கழித்து திருச்சி சிவா இந்த தகவலைக் கூறி இருப்பது, காமராஜரை இழிவுபடுத்தும் செயல் என்று கூறி வருகின்றனர்.
உண்மையில், காமராஜரை பல மோசமான வார்த்தைகளால் கருணாநிதி திட்டியவர் என்பது குற்றச்சாட்டாகக் கூறப்பட்டு வருகிறது.