கணக்கு காட்ட சொன்னவர் வாத்யார் எம்ஜிஆர்.. காட்டுவீங்களா? – விடாமல் சீண்டும் மய்யத்தார்!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (09:18 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடி வருவதும், அதிமுகவை விமர்சித்து வருவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

முன்னதாக மதுரை உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன்னை எம்ஜிஆரின் நீட்சி என குறிப்பிட்டார். இதற்கு அதிமுக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்ததுடன், எம்ஜிஆரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று பேசி வந்தனர். இந்நிலையில் தொடர்ந்து எம்ஜிஆர் குறித்தும், அதிமுக குறித்தும் கமல்ஹாசன் தொடர்ந்து பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் ” இதுகாறும் 'அம்மா ஆட்சி' என்றே முழங்கிக்கொண்டிருந்தவர்கள் மீண்டும் புரட்சித் தலைவரின் பெயரைப் புழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். மகிழ்ச்சி. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கும் முன்னரே, அவரவர் குவித்த சொத்துக்களுக்கு கணக்கு காட்டச் சொன்னவர் வாத்யார். காட்டுவீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “ஒரே நாளில் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தவர் எம்.ஜி.ஆர். ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா?!” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments