தேவர் மகன் படத்தின் 2ம் பாகத்திற்கான தலைப்பை தான் இன்னும் உறுதி செய்யவில்லை என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
அரசியல் கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசன், தேவர்மகன் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் மீண்டும் சாதியை கையில் எடுக்கிறார். அரசியல் லாபத்திற்காக சாதியை வைத்து மீண்டும் படம் எடுக்கிறார் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கமல்ஹாசன் “மதுஒழிப்பை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கினால், கதாநாயகன் குடிகாரனாகத்தான் இருக்க வேண்டும். அப்படித்தான் இதுவும். தேவர் மகன் 2 என நான் தலைப்பு வைக்க வில்லை. இது இன்னும் முடிவாகவில்லை” என விளக்கம் அளித்தார்.