Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சின்மயிக்கு ஆதரவு தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்

Advertiesment
சின்மயிக்கு ஆதரவு தெரிவித்தார் நடிகர்  கமல்ஹாசன்
, வெள்ளி, 12 அக்டோபர் 2018 (13:58 IST)
பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது வைத்துள்ள  ''#மீடூ '' குற்றச்சாட்டுகள் தான் தற்போது தமிழத்தில் பெரிய விவாதத்தை உருவாக்கி உள்ளது.  இந்த ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குற்றங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
 
 
இந்நிலையில்,  பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இதில் நிறைய குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். தற்போது சின்மயிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நடிகர் கமல் ஹாசனும் கருத்து தெரிவித்துள்ளார். 
 
கமல்ஹாசன் தற்போது முழு நேர அரசியல்வாதியாக இறங்கிவிட்டார். மேலும் அவர்  சமூகத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகின்றார்.
 
இந்நிலையில் சமீபத்தில் பாடகி சின்மயியின் மீ டூ என்ற விஷயம் தான் இணையத்தில் வைரல், பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்ட போது
 
அவர்  ‘இதை நான் வரவேற்கின்றேன், அதே சமயம் நியாயமான முறையில் "மீ டூ" குறையை சொல்ல வேண்டும்’ என்று பதில் அளித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹோட்டல் அறையில் என்ன நடந்தது தெரியுமா? - நடிகை அதிர்ச்சி தகவல்