மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அண்மையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணல் நிகழ்சசியில் கலந்து கொண்டார்,
அப்போது, அவரிடம் நெறியாளர், "சர்கார் பட வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசும் போது, தான் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருப்பேன், ஊழலை ஒழிப்பது எப்படி என்று பேசுகிறார், நீங்கள் இதனை கோபம் கொண்ட ஒரு இளைஞனின் வார்த்தைகளாக பார்க்கிறீர்களா அல்லது அரசியல் அபிலாஷை கொண்ட இன்னொரு நடிகரின் வார்த்தைகளாக பார்க்கிறீர்களா என்று கேட்டார்.
அதற்கு கமல் பதில் அளித்து பேசியதாவது: அவரு கிட்ட போய் பேசி பார்க்கணும், தம்பி எப்ப வேணும்னா போன எடுத்து பேசலாம். அத இருங்கிருந்து பேசுறேன், என்னுடைய தம்பிய நான் கூப்டுறேன், தம்பி நீங்க கோபத்துல பேசுனீங்களா, என்ன வேணும் உங்களுக்கு என்று கேள்வி கேட்பேன். விஜய்நிஜத்தை என்கிட்ட சொல்லுவாரு. கோபம் என்றால் நல்லா கோப்படச் சொல்லுவேன் என்றார்.
உங்க கட்சிக்கு விஜய்யை கூப்பிடுவீங்களா என்ற கேள்விக்கு, வரவேண்டும் என்பதை விஜய் தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சியில், நடிகர் விஜய் சேர விரும்பினால், அவருக்கு இடம் உண்டு என்றார்.