Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோனியை சேர்த்தாலும் இந்தியா வலுவாகாது – கம்பீர் காட்டம் !

Advertiesment
தோனியை சேர்த்தாலும் இந்தியா வலுவாகாது – கம்பீர் காட்டம் !
, வியாழன், 14 மார்ச் 2019 (12:46 IST)
இந்திய அணியில் தோனியை சேர்த்தாலும் அதில் பெரிதாக எந்த மாற்றமும்  நடக்காது என முன்னாள் இந்திய வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி அணி டி 20  மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி 20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்  தொடரின் முதல் நான்குப் போடிகளிலும் இரு அணிகளும் தலா இருப் போட்டிகளில் வெற்றி  பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதையடுத்து நேற்று நடந்த 5 ஆவது போட்டியில் ஆஸி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்த தோல்விக்குப் பின்னர் பேசிய இந்திய கேப்டன் கோஹ்லி, ‘உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இந்த அணியில் தோனி மற்றும் பாண்ட்யா ஆகியோர் மட்டுமே இன்னும் இணைய இருக்கிறார்கள்.’ எனறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் சமீபத்திய செயல்பாடு குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் கம்பீர் ‘உலகக்கோப்பை அணி விவரம் ஏறக்குறைய இறுதி செய்யப்பட்டு விட்டது. ஐபிஎல் பிறகு உலகக்கோப்பைதான் ஆகவே அணியில் பெரிய மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை. ஆனால் இந்த அணி நிச்சயம் உலகக்கோப்பைக்கான சிறந்த இந்திய அணியாக இருக்க முடியாது என்று உத்தரவாதமாகக் கூறுகிறேன்.

விராட் கோலி இந்தியாவின் உலகக்கோப்பை அணி இதுவாகவிருக்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் இந்த லெவன் நிச்சயம் நம்பிக்கையளிப்பதாக இல்லை. தோனியை இந்த அணியில் சேர்த்தாலும் கூட இந்த பிளேயிங் லெவனில் எந்த ஒரு தாக்கமும் ஏற்பட்டு விடப்போவதில்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றிக்கு ஆஸ்திரேலியாவே தகுதியான அணி - விராட் கோஹ்லி கருத்து !