Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’கமல் ஆன்டி இந்தியன் அல்ல’.. ’ஆன்டி மனித குலம்’ - ஹெச். ராஜா விமர்சனம்

’கமல் ஆன்டி இந்தியன் அல்ல’.. ’ஆன்டி மனித குலம்’ - ஹெச். ராஜா விமர்சனம்
, புதன், 15 மே 2019 (14:56 IST)
கமல்ஹாசன் ஆன்டி இந்தியன் அல்ல, அவர் ஆன்டி மனித குலம் என்று பாஜக தேசிய செயலர்  ஹெச். ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் அரவக்குறிச்சியில் பிரசாரன் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று தெரிவித்தார். இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதுகுறித்து கமல் மீது அரவக்குறிச்சியில் வழக்கு தொடரப்பட்ட்டது கருர் மாவட்ட எஸ்பியும் எச்சரிக்கை விடுத்தார்.
 
இந்நிலையில் பா.ஜ.க சார்பில் வழக்கறிஞர் அஸ்வின் உபாத்யோய டெல்லி உயர்நீதிமன்றத்தில் கமலுக்கு எதிராக அவதூறு வழக்கு பதிவு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் “தமிழ்நாட்டில் நடந்த பிரச்சினைக்கு அங்கே வழக்கு பதியாமல் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தது ஏன்?” என்று கேல்வி எழுப்பினர். மேலும் இவ்வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்கள்.
 
ஆனால், இந்த வழக்கை தவிர்த்து இந்து சேனா அமைப்பு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நாளை மதியம் 2 மணியளவில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இநிலையில் தற்போது பாஜக தேசிய செயலாளரும், சிவகங்கை தொகுதி வேட்பாளருமான ஹெச்.ராஜா கொடைக்கானைல் செய்தியாளர்களிடம் கூறியதாவது : 
 
அவர் கூறியுள்ளதாவது : 
 
கமல்ஹாசன் ஆன்டி இந்தியன் அல்லா. அவர் ஆன்டி மனிதகுலம். கமலின் இந்து தீவிரவாதி பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் வைரமுத்துவுக்கு எழுந்ததுபோல் கமலுக்கு எதிர்ப்பு உருவாகும் என்று தெரிவித்துள்ளார். கமல்ஹசனை மனிதகுலத்துக்கே எதிரானவன் என்று அவர் கூறியுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்ஸ்டாக்ராமில் வாக்கெடுப்பு நடத்தி இளம்பெண் தற்கொலை