நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் மிக விரைவில் வெளியேறுவார் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், இன்று அவர் அதிகாரப்பூர்வமாக அந்த கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார். இருப்பினும், தமிழ் தேசிய பாதையில் தனது அரசியல் பயணம் தொடரும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் அடுத்து எந்த கட்சியில் இணைவார் என்பது குறித்த யூகங்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன. விரைவில், அவர் திமுக நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள நிலையில், அவர் திமுகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், நாம் தமிழர் கட்சியில் இருந்தபோது திமுகவை மிக அதிகமாக விமர்சித்ததால், அவர் திமுகவில் இணைய மாட்டார் என்றும் கூறப்படுகிறது. எனவே, அடுத்ததாக அதிமுக அல்லது விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணையலாம் என்றும், தமிழக வெற்றி கழகத்தில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, விஜய் கட்சியினருடன் காளியம்மாள் பல முறை ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.