தேர்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படாமல் இருப்பதால், 2026 ஆம் ஆண்டு தேர்தல் திமுகவுக்கு சிரமமாக இருக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சண்முகம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு வெளிநாடுகளில் சென்று போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரகசியமாக இருப்பதாகவும், எங்கேயாவது தொழில் தொடங்கப்பட்டிருக்கிறதா என்பதை அரசு விளக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் ஏராளமான கோரிக்கைகள் இன்னும் அப்படியே இருக்கின்றன என்றும், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் திமுகவுக்கும் அதன் கூட்டணிக்கும் சிரமமாக இருக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, வரவிருக்கும் ஒரு வருடத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
திமுகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது சிரமமாக இருக்கும் என்று கூறியிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.