Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈரோட்டை அடுத்து காஞ்சிபுரம் – ஸ்டாலின் கலைஞருக்கு செய்யும் மரியாதை !

ஈரோட்டை அடுத்து காஞ்சிபுரம் – ஸ்டாலின் கலைஞருக்கு செய்யும் மரியாதை !
, வியாழன், 31 ஜனவரி 2019 (09:13 IST)
முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு நேற்று ஈரோட்டில் சிலை திறக்கப்பட்டது. அதையடுத்து தமிழகம் முழுவதும் அவருக்கு சிலை அமைக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி காலமானதையடுத்து திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி அண்ணா சிலைக்கு அருகில் கலைஞர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அகில இந்தியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அதையடுத்து கலைஞருக்கு தமிழகம் முழுவதும் சிலையமைக்க திமுக தலைவரும் தொண்டர்களும் முடிவு செய்துள்ளனர். அதனை முன்னிட்ட்ட் கலைஞருக்கும் பெரியாருக்கும் நட்பு ஏற்பட்டு கலைஞரின் அரசியல் வாழ்க்கைக்கு ஆரம்பப்புள்ளி வைத்த ஈரோடு மண்ணில்  இரண்டாவது சிலை நேற்று திறக்கப்பட்டது.

அந்த விழாவில் பேசிய ஸ்டாலின் ’கலைஞரின் குருகுலமான ஈரோட்டில் அவரது இரண்டாவது சிலை திறக்கப்பட்டது மிக்க மகிழ்ச்சி. அதையடுத்து கலைஞரி அடுத்தடுத்த சிலைகள் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்திலும், கலைஞர் ண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்த கல்லக்குடியிலும் அமைய இருக்கிறது. அதனையடுத்து கலைஞர் திரையுலகில் கோலோச்சிய கோவை மற்றும் சேலம் ஆகிய ஊர்களிலும் அமைய இருக்கிறது. விரைவில் இதுபோல தமிழகம் முழுவதும் சிலைகள் அமைக்க இருக்கிறோம்’ எனக் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழிசையை கேவலமாக கிண்டலடித்த பிரபல ஊடகம்!!