Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தலில் எப்படி வெற்றி பெற வேண்டும்...? தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

Advertiesment
தேர்தலில் எப்படி வெற்றி பெற வேண்டும்...? தொண்டர்களுக்கு   ஸ்டாலின் அறிவுரை
, புதன், 30 ஜனவரி 2019 (16:15 IST)
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக பல்வேறு கட்சி தலைவர்கள் தேர்தலுக்காக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளும் தான் பிரதாக கட்சிகளாக கடந்த 50 ஆண்டுகளில் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி புரிந்திருக்கின்றன.
திராவிட கட்சிகளின் ஆதரவில் காலூன்றும் தேசிய கட்சியில் காங்கிரஸ் மட்டுமே தமிழகத்தில் சில இடங்களில் திமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றுள்ளது.
 
அதிமுகவில் ஜெயலலிதா இல்லாமலும், திமுகவில் கருணாநிதி இல்லாமலும் அக்கட்சியினர் சந்திக்க போகும் நாடாளுமன்ற தேர்தல் இது. 
 
இந்நிலையில் திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், சேலம் மாவட்டத்தை அடுத்த பாகல்பட்டியில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர் ,தேர்தல் நிமித்தமாக முகவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
 
அதில் திமுகவுக்கு ஆதரவளிக்கும் மக்களைப் பயன்படுத்தி திமுகவை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.மேலும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும். 234 நான்கு தொகுதியிலும் திமுக வெற்றி பெறுவது உறுதியாக்கியுள்ளது என்று தெரிவித்தார்.
 
மேலும் கிராம சபைக் கூட்டத்தில் பேசிய அவர் தற்போதைய ஆட்சி கரப்ஷன், கலெக்சன் , கமிஷன் இவற்றுடன் தான் நடைபெறுகிறது. நான் எந்த பாதுகாப்பும் இல்லாமல் கிராமங்களுக்குச் செல்வது போல் முதலமைச்சரால் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திக்க முடியுமா... என்று பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போராட்டத்தில் ஈடுபட்டாலும் ஈடுபடாவிட்டாலும் சம்பளம் கிடையாது ?...