Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜனவரி 36ல் குடியரசு தினமா? குழப்பத்தில் கமல்ஹாசன்

ஜனவரி 36ல் குடியரசு தினமா? குழப்பத்தில் கமல்ஹாசன்
, செவ்வாய், 29 ஜனவரி 2019 (11:33 IST)
கமல்ஹாசன் பேசும் பேச்சாக இருந்தாலும் அவர் பதிவு செய்யும் டுவீட்டாக இருந்தாலும் டிக்சனரியை கையில் வைத்து கொண்டுதான் கேட்க வேண்டும் அல்லது பார்க்க வேண்டும். அந்த அளவுக்கு எளிமையாக புரியும் வகையில் அவர் பேசவும் மாட்டார், அவருடைய டுவீட்டும் இருக்காது என்று பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கிராமசபை குறித்து பேசிய கமல்ஹாசன், 'நீங்கள் மக்கள் நீதி மய்யம் கூட்டத்தில் கலந்து கொள்வது போல் ஜனவரி 36, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நாட்களில் கிராம சபைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று பேசினார். ஜனவரி 26 என்று கூறுவதற்கு பதிலாக அவர் ஜனவரி 26 என்று கூறியதை கேட்டு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே பழமொழிகளை மாற்றி சொன்ன திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டலடித்த நெட்டிசன்கள் தற்போது கமல்ஹாசனின் இந்த பேச்சையும் கிண்டலடித்து, மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

webdunia
இருப்பினும் கிராமசபையில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை முதன்முதலில் தமிழக மக்களுக்கு ஏற்படுத்தியது கமல்ஹாசன் தான் என்றும், வாய்தவறி கூறிய ஒரு வார்த்தையை வைத்து அவரது திறமை மீது சந்தேகப்படக்கூடாது என்றும் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெட்மிக்கு போட்டியாக பட்ஜெட் விலையில் எம்சீரியஸ் மொபைல்கள்: சாம்சங் அதிரடி