Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா; 100 தமிழர்களுக்கு அனுமதி! – இலங்கை அரசு அறிவிப்பு!

Advertiesment
கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா; 100 தமிழர்களுக்கு அனுமதி! – இலங்கை அரசு அறிவிப்பு!
, வியாழன், 10 மார்ச் 2022 (13:06 IST)
இந்திய – இலங்கை எல்லையில் உள்ள கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள 100 தமிழர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்தியா – இலங்கை மக்களிடையே இணக்கமான உறவை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் அந்தோணியார் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த திருவிழா நடைபெறாத நிலையில் நாளை தொடங்கி இந்த திருவிழா இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவில் கலந்து கொள்ள 100 இந்திய பக்தர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்பேரில் நாளை ராமேஸ்வரம் துறைமுக பகுதிகளில் இருந்து விசைப்படகுகள் மூலம் 100 பக்தர்கள் கச்சத்தீவு செல்ல உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைன் போரால் பாதிப்பு; இந்தியா இடம்பெயர ஐடி நிறுவனங்கள் திட்டம்!