Publish Date: Thu, 10 Mar 2022 (09:04 IST)
Updated Date: Thu, 10 Mar 2022 (09:09 IST)
உக்ரைனில் மூண்ட போரால் தாயகம் திரும்பிய மாணவர்களுக்கு கல்வி கடனை ரத்து செய்ய வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த ஏராளமான இந்திய மாணவர்கள் அங்கிருந்து இந்தியா வந்தடைந்துள்ளனர். உக்ரைனில் போர் சூழல் நிலவுவதால் அவர்களது படிப்பு கேள்விக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், உக்ரைனிலிருந்து மருத்துவ படிப்பை தொடர முடியாமல் இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு அவர்கள் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும், அவர்களது படிப்பு பாதிக்கப்படா வண்ணம் இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் அவர்களுக்கு இடங்கள் ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.