Publish Date: Fri, 28 Oct 2022 (16:20 IST)
Updated Date: Fri, 28 Oct 2022 (16:21 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகர் படம் அச்சிட வேண்டும் என கூறியதற்கு திராவிட கழகத் தலைவர் வீரமணி பதிலடி கொடுத்துள்ளார்.
ரூபாய் நோட்டுகளில் தற்போது மகாத்மா காந்தியடிகளின் புகைப்படம் மட்டும் இருக்கும் நிலையில் அம்பேத்கார், சத்ரபதி சிவாஜி, பிரதமர் மோடி, சர்தார் வல்லபாய் படேல் உட்பட பலருடைய புகைப்படங்களை அச்சிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது
இந்த நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ரூபாய் நோட்டில் லட்சுமி மற்றும் விநாயகர் படத்தை அச்சிட வேண்டும் என்றும் அப்போது தான் நாடு செழிப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்
இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கூறியபோது குஜராத் தேர்தலுக்காக அரவிந்த் கேஜரிவால் திடீரென பக்தி வேஷம் போடுகிறார் என்று தெரிவித்துள்ளார்
ஹிந்துத்துவா வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக பாஜக, ஆர்.எஸ்,.எஸ்-ஐ விட ரு படி மேலே போய் அரவிந்த் கெஜ்ரிவால் இப்படி ஒரு துருப்புச் சீட்டை இறக்கி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்