Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிபிசி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார் துணைமுதல்வர் மணீஸ் சிசோடியா

சிபிசி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார் துணைமுதல்வர் மணீஸ் சிசோடியா
, திங்கள், 17 அக்டோபர் 2022 (19:32 IST)
டெல்லி யூனியனின் துணை முதல் மணீஸ் சிசோடியா இன்று சிபிசி அலுவலகத்தில் நேரில் ஆஜரரானார்.

டெல்லி யூனியனில் முதல்வர்  கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, சமீபத்தில், மதுபானம் உரிமை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த புகாரின் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் பாஜக வேண்டுமென்றே குற்றம்சாட்டுவதாகவும் பழிவாங்குவதாகவும்  ஆம் ஆம்மி தரப்பு கூறினர்.

இந்த  நிலையில்,  புதிய மதுபான கொள்கை மோசடி புகாரில் சிபிசை அதிகாரிகள் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று மணீஸ் சிசொடியாவுக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், சிபிஐ தன்னை கைது செய்யதிட்டமிட்டுள்ளதாகவும், போலி வழக்கில் சிபிஐ என்னைக் கைது செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும்  துணை முதல்வர் மணீஸ் சிசோடியா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  டெல்லியில் உள்ள சிபிசை தலைமை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரான துணைமுதல்வர் மணீஸ் சிசோடியாவிடம் சிபியை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த  விசாரணையில் எதாவது முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுநர் கவுரவத்தை குறைக்கும் வகையில் பேசும் அமைச்சர்கள் பதவி பறிக்கப்படும்: எச்சரிக்கை அறிவிப்பு