கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி இருந்த நிலையில் தற்போது உலகின் மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி இல்லை என்பது பெருமிதமாக உள்ளது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்
சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக இருந்தது என்றும் ஆனால் தற்போது டெல்லி மக்கள் கடுமையாக உழைத்து உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றி உள்ளனர் என்றும் தொடர்ந்து நல்ல நிலையை அடைய நாங்கள் கடுமையாக உழைப்போம் என்று டெல்லி முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
உலகின் மற்ற நகரங்களில் பட்டியலில் டெல்லி இல்லை என்பது மட்டுமின்றி ஆசியாவின் மாசடைந்த நகரங்களின் பட்டியலிலும் டெல்லி இடம் பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்
டெல்லி மக்கள் மாசை குறைக்க கடுமையாக உழைத்து வருகின்றனர் என்றும் டெல்லியின் காற்று தரக்குறியீடு எண் 323 என பதிவாகி உள்ளதையும் முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டி உள்ளார்.