மக்கள் வரிப்பணத்தில் 20 ஆயிரம் கோடி ஆடம்பர செலவு செய்வதை தவிர்த்து விட்டு சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தடுப்பூசி தயாரிக்க கேட்கும் 3000 கோடி ரூபாயை உடனடியாக கொடுங்கள் என கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளர. இதுகுறித்து அவர் மேலும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது:
இந்த நெருக்கடியான நேரத்தில் சென்ரல் விஸ்தா ப்ராஜெக்ட் எனும் ஆடம்பரத்துக்கு 20,000 கோடி ரூபாய் மக்கள் வரி பணத்தை செலவு செய்வதை மோடி அரசு உடனடியாக கைவிடவேண்டும். கொரொனா தொற்று மீண்டும் தலைதூக்குவதால் மருத்துவம் மற்றும் மக்களுக்கு உதவ அந்த நிதி பயன்படுத்தப்படவேண்டும்.
இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தி செய்யமுடியவில்லை. நாங்கள் லாபம் வைத்து விற்கவில்லை. ஆனால் உற்பத்திக்காவது ரூ3000 கோடி தேவை என்று சீரம் இன்ஸ்டிடியூட் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. உடனடியாக மத்திய அரசு இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.