இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போட பிரதமரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒருநாள் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிய நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய அனுமதியின்படி நாடு முழுவதும் 45 வயதிற்கு அதிகமானோருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்தியா முழுவதும் 18வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டுமென இந்திய மருத்துவ கவுன்சில் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி 8ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்க உள்ள நிலையில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.