Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தல' எப்போதும் ஒரு தனிரகம்! காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி பாராட்டு

Advertiesment
தல' எப்போதும் ஒரு தனிரகம்! காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி பாராட்டு
, திங்கள், 21 ஜனவரி 2019 (22:10 IST)
தல அஜித் இன்று தனது அரசியல் வருகை குறித்தும், மற்ற நடிகர்களை மரியாதையுடன் தனது ரசிகர்கள் நடத்துவது குறித்தும் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கை பல கேள்விகளுக்கு விடையாய் இருந்தது. மேலும் அவர் மீதான நன்மதிப்பும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அஜித்தின் அறிக்கை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி தனது டுவிட்டரில், 'ஒரு ஜனநாயக நாட்டில் நடிகர்கள் உட்பட யாருக்கும் அரசியலுக்கு வருவதற்கான உரிமையுண்டு. நடிப்பைத்தாண்டி தனது சுயநலத்திற்காகவும், அதிகாரத்திற்கு அனுக்கமாக இருப்பதற்காக மட்டுமே பலவருடங்களாக 'அரசியலை' பயன்படுத்துபவர் மத்தியில் அஜீத்தின் தெளிவு மரியாதைக்குரியது.' தல' எப்போதும் ஒரு தனிரகம்! என்று குறிப்பிட்டுள்ளார்.

webdunia
அரசியல் ஈடுபாட்டில் ஆர்வமே இல்லை என அஜீத் அறிவித்திருப்பது மிகப்பெரிய விஷயம்தான் என்றும், ஆனால், இதில் எவ்வித ஏமாற்றத்தையும் அடையாமல், அவருடைய மொத்த ரசிகர்களும் ஒருசேர அஜீத் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடுவது உண்மையில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2014 தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவில் மோசடி! அமெரிக்க நிபுணர் அதிர்ச்சி தகவல்