Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2014 தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவில் மோசடி! அமெரிக்க நிபுணர் அதிர்ச்சி தகவல்

2014 தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவில் மோசடி! அமெரிக்க நிபுணர் அதிர்ச்சி தகவல்
, திங்கள், 21 ஜனவரி 2019 (20:48 IST)
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவின் மூலம் பெரும் மோசடி நடந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் நிபுணர் சையது சுஜா என்பவர் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் தெரிவித்துள்ளார்.

இதன்படி 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு இயந்திரங்கள் ஹேக்கிங் மூலம் மோசடி செய்யப்பட்டதாகவும், இந்த மோசடிக்கு இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று உதவியதாகவும், இதனை தன்னால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் மின்னணு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதால் காங்கிரஸ் 201 இடங்களில் தோல்வி அடைந்ததாகவும், நியாயமாக தேர்தல் நடந்திருந்தால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

webdunia
ஆனால் இதனை கடுமையாக மறுத்துள்ள தேர்தல் ஆணையம், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு எதுவும் செய்ய வாய்ப்பு இல்லை என்றும், கடுமையான மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள்படியே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இந்த புகாரை தெரிவித்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோயில் திருவிழாவுக்கு தயாராகும் தடபுடல் ஆட்டு பிரியாணி...