Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்காரை எதிர்க்க தெம்பிருக்கு; இதுக்கு நேரமில்லையா? அதிமுகவை கிழித்து தொங்கவிட்ட ஜிக்னேஷ்!

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2018 (15:57 IST)
சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் கடும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை விமர்சித்து குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். 
 
அவர் கூறியது பின்வருமாறு, சிறுமி ராஜலட்சுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமையாக கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். ஜாதி காரணமாக அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 
 
ஆனால், இன்னும் தமிழக அரசு தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை கைது செய்யாமல் உள்ளது. எது அவசியமோ அதையெல்லாம் விட்டுவிட்டு தமிழக அரசு சர்கார் குறித்து பேசி வருகிறது. 
 
சர்காருக்கு எதிராக போராடிய கட்சியினர், ராஜலட்சுமி குறித்து பேச மறுக்கிறார்கள். ராஜலட்சுமிக்காக நான் குரல் கொடுப்பேன். இந்தியா முழுக்க இதை தெரியப்படுத்துவேன். 
 
தமிழகத்தில் தலித் மக்களும், பெண்களும் படும் கஷ்டம் பற்றி இந்தியா முழுக்க பேசுவேன். அடுத்து இந்தியாவின் முக்கிய 20 தலைவர்களை அழைத்து இது குறித்து பேச இருக்கிறேன் என  ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்