குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி அசாஅம் மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டு அதன் பின் ஜாமினில் வெளி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜிக்னேஷ் மேவானி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
2017ஆம் ஆண்டு உன்னாவ் தலித் வன்கொடுமையை கண்டித்து ஜிக்னேஷ் மேவானி ஊர்வலம் நடத்தினார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கில் அவருக்கு முன் 3 மாத சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது