சென்னை தியாகராயர் நகரில் இருந்து சைதாப்பேட்டை நோக்கி கனரக லாரி மூலம் எடுத்து வரப்பட்ட பொக்லைன் இயந்திரம் ஒன்று, அரங்கநாதன் ரயில்வே சுரங்க பாதையில் சிக்கிக்கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொக்லைன் இயந்திரம் ஏற்றப்பட்ட கனரக லாரியின் உயரம், சுரங்க பாதையின் கீழ் மட்ட உயரத்தை விட அதிகமாக இருந்ததே இதற்கு காரணமாகும். லாரி சுரங்க பாதைக்குள் நுழைந்தபோது, பொக்லைன் இயந்திரத்தின் மேற்பகுதி மேற்கூரையில் மோதி சிக்கியது. இதனால் சுரங்கப்பாதையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முடங்கிய நிலையில், கனரக வாகனத்தின் மீது இருந்த பொக்லைன் இயந்திரத்தின் பாகங்களை அகற்றி, வண்டியை சுரங்கப் பாதையிலிருந்து மீட்பதற்கான பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சுரங்கப் பாதையில் பொக்லைன் சிக்கியதால், அப்பகுதியில் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.