Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரிப்பு.. சென்னையில் வேறோடு சாய்ந்த மரம்.. மழை பாதிப்பு நிலவரம்..!

Advertiesment
செம்பரம்பாக்கம் ஏரி

Siva

, புதன், 22 அக்டோபர் 2025 (08:20 IST)
சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து நேற்று இருந்த 1800 கன அடிகளிலிருந்து இன்று 20170 கன அடியாக அதிகரித்துள்ளது. 24 அடி மொத்த நீர்மட்டத்தில் தற்போது 20 அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளதாகவும், இதன் காரணமாக ஏரியில் தற்போது 2.8 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளதாகவும், எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வினாடிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இந்த நிலையில், சென்னை கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரம் ஐந்தாவது தெருவில் வேரோடு ஒரு மரம் சாய்ந்ததை அடுத்து அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்ததாகவும், மரத்தை அகற்றும் பணியிலும், மின்கம்பத்தை சரி பார்க்கும் பணியிலும் ஊழியர்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
அதேபோல் சென்னையில் உள்ள சுரங்கப் பாதைகளிலும் தேங்கிய நீர் அவ்வப்போது வெளியேற்றப்பட்டு வருவதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?