தேர்தல் முடிந்ததும் பாஜகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் இருப்பார் என்றும் தலைவராக ஓபிஎஸ் இருப்பார் என்றும் அண்ணாமலை காணாமல் போய்விடுவார் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை செய்த போது பாஜக மற்றும் டிடிவி தினகரனை கடுமையாக தாக்கி பேசினார். தேனியில் அவர் பிரச்சாரம் செய்தபோது தேனியில் டிடிவி தினகரன், ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் ஆகிய இரண்டு பேருமே தோல்வி அடைவார்கள் என்றும் ஆனாலும் அவர்கள் தேர்தலுக்கு பின்னர் பாஜகவின் முக்கிய இடத்தை பிடிப்பார்கள் என்றும் கூறினார்.
தேர்தலுக்கு பின் டிடிவி தினகரன் தான் பாஜகவின் பொதுச் செயலாளர் மற்றும் ஓபிஎஸ் தான் தலைவர் என்றும் அவர் கூறினார். தற்போது பாஜகவின் தமிழக தலைவராக இருக்கும் அண்ணாமலை காணாமல் போய்விடுவார் என்றும் ஜெயக்குமார் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மக்களவைத் தேர்தலுக்குப் பின் காணாமல் போய்விடும் என அண்ணாமலை கூறியதற்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.