ஈரோடு உள்பட ஆறு தொகுதிகளில் திமுக மந்தமான பிரச்சாரத்தில் இருப்பதாக உளவுத்துறை ரிப்போர்ட் அளித்ததாகவும் இதனை அடுத்து திமுக தலைமையிடம் இருந்து எச்சரிக்கை பறந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு, பொள்ளாச்சி, நாமக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய ஆறு தொகுதிகளில் திமுகவினர் சரியாக பணியாற்றவில்லை என்று உளவுத்துறை ரிப்போர்ட் அளித்ததை அடுத்து முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஆறு தொகுதிகளுக்கும் எச்சரிக்கை பறந்ததாக கூறப்படுகிறது
ஆனால் எச்சரிக்கை வந்த பின்னரும் ஈரோட்டில் திமுகவினர் சரியாக பிரச்சாரம் செய்யவில்லை என்பதால் ஈரோடு தொகுதியில் வெற்றி பெறவில்லை என்றால் அந்த மாவட்டத்தின் நிர்வாகிகள் பதவி பறிக்கப்படும் என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் குறித்து ஆய்வு செய்ய முதல்வரின் குடும்பத்தில் உள்ள முக்கிய நபர் சுற்றுப்பயணம் செய்த போது ஈரோட்டில் உள்ள நிலவரம் குறித்து அவரே நேரில் அறிந்து அதிருப்தி அடைந்தாராம். தலைவர் ரொம்ப கோபமாக இருக்கிறார், எதிர்பார்த்த ரிசல்ட் வரவில்லை என்றால் பதவி போய்விடும் என்று நேரடியாகவே திமுக நிர்வாகிகளிடம் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.